இஞ்சி - மிளகு மோர்க்குழம்பு




தேவையான பொருள்கள் 
  • வெண்டைக்காய், மிளகு தலா ---  10
  • புளித்த மோர் ---  2 கப் 
  • காய்ந்த மிளகாய் ---  1
  • இஞ்சி ---  1 சிறுதுண்டு 
  • தேங்காய்த் துருவல் ---  4 ஸ்பூன் 
  • கடுகு, சீரகம் தலா ---  1/2 ஸ்பூன் 
  • எண்ணெய், உப்பு ---  தேவையானது 

செய்முறை 
  • கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த்துருவல்  வறுத்து ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். உப்பு, மோர் சேர்த்து கலக்கவும். இதில், வெண்டைக்காய் நீள  துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை வதக்கி மோர் கலவையில் சேர்க்கவும்.இந்தக் கலவையை அதிகம் கொதிக்கவிடாமல் சூடாக்கவும்.

  • இதில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டவும்.


பயன்கள் 
     இது ஒரு பத்திய மூலிகை மோர் குழம்பு. வாரம் ஒரு முறை எடுத்து வர உடல் பலப்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url