ஆண்கள் இளநரை மறைய !
ஆண்கள் இளநரை மறைய
. வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மறையும். இவ்வகை பட்டை நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
. சம அளவில் நெல்லி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம்.
. கரிசலாங்கண்ணிச் சாறு, கடுக்காய் ஊறிய தண்ணீர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.