நயன்தாராவின் வேண்டுகோள்!




                                      பிரபுதேவாவை பிரிந்த பிறகு ரொம்ப சீரியசான நடிகையாகி விட்டார் நயன்தாரா. கேமரா முன்பு நடிக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் சீரியசாகவே அவர் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னாடி அமர்ந்து அரட்டையரங்கம் நடத்துபவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால்கூட அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் லேசான முன்முறுவலோடு நிறுத்திக்கொள்வார் நயன்தாரா. விளைவு, அவரது முகபாவனைகளை கவனித்த இயக்குனர்கள் அதன்பிறகு சீரியசான கதைகளுடன் நயன்தாராவை முற்றுகையிட்டனர். அப்போதைக்கு அது அவருக்கு ரொம்ப மேட்சாகவே இருந்தது. இந்நிலையில், மாஸ், மாயா படங்களை அடுத்து தனி ஒருவன், நானும் ரெளடிதான், காஷ்மோரா, திருநாள் ஆகிய படங்களில் நடித்து வருபவர், அடுத்தபடியாக ஜனரஞ்சகமான கதைகளில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறாராம். தற்போது நடித்துவரும் நானும் ரெளடிதான், திருநாள் படங்களில் சீரியசாக கதைகள் என்றாலும், சில காமெடி காட்சிகளிலும் நயன்தாரா நடித்திருக்கிறாராம். அதனால் அடுத்தபடியாக இன்னும் காமெடியான கதைகளில் நடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் காமெடியை தூக்கலாக வைக்குமாறு பர்சனலாக கேட்டுக்கொண்டு வருகிறார் நயன்தாரா.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad