ரெய்னா, ஜடேஜாவுக்கு சலுகையா * பி.சி.சி.ஐ., ‘இரட்டை வேடம்’ *
ி ரிமியர் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பி.சி.சி.ஐ.,யின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. முன்பு ஸ்ரீசாந்த், சண்டிலாவுக்கு தடாலடியாக தடை விதித்தது. ஆனால், ரெய்னா, ஜடேஜாவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆறாவது இந்தியன் பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடரில் ‘ஸ்பாட்–பிக்சிங்’ எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்டோர் சிக்கினர். இதில் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பிரிமியர் தொடரின் தலைவராக (2008–10) இருந்த லலித் மோடி, ஐ.சி.சி.,க்கு 2013ல் அனுப்பிய ‘டுவிட்டர்’ கடிதத்தில்,‘ சென்னை அணியின் ரெய்னா, ஜடேஜா, டுவைன் பிராவோ சூதாட்டத்தில் ஈடுபட்டு தலா ரூ. 20 கோடி மற்றும் சில ‘பிளாட்டுகள்’ பரிசாக பெற்றனர்,’ என தெரிவித்தார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் அனுராக் தாகூர் கூறுகையில்,‘‘ புகாருக்கு போதிய ஆதாரமில்லை என்பதால் ஐ.சி.சி., இவர்களை விளையாட அனுமதித்தது,’ என்றார்.
பி.சி.சி.ஐ.,யின் இந்த விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் தங்களது அமைப்பு தான் பிரிமியர் தொடரை நடத்துகிறது என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. தற்போது இத்தொடர் சர்வதேச தொடர் என்றும், ஐ.சி.சி., விசாரணையில் தலையிட முடியாது என்றும் தலைகீழாக மாற்றி கூறுகிறது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சர்வதேச வீரராக இருந்தார். இவருக்கு பி.சி.சி.ஐ., ஒழுங்குமுறை கமிட்டி வாழ்நாள் தடை விதித்தது. இப்போது ரெய்னா, ஜடேஜா, பிராவோ மீதான புகாரை மட்டும் ஐ.சி.சி., எப்படி விசாரிக்க முடியும். இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., மீது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.