தல 56 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அடுத்த மாதம் ரிலீஸ் !
வீரம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் உடன் இயக்குநர் சிவா இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலி நாட்டில் நடந்து வருகிறது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடிக்க, அஜித்தின் நண்பராக சூரி நடித்து வருகிறார். அஜித் படத்துக்கு கடைசிநேரத்தில்தான் தலைப்பு வைக்கப்படும் என்ற வழக்கத்தின்படி இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. எனவே தல 56 என்று குறிப்பிடப்பட்டு வரும் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர். தற்போது இத்தாலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர். அதன்பிறகு கொல்கொத்தாவில் சிலநாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. லேட்டஸ்ட், தகவலின்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.