தல '56' ...படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீட்டு தேதிகள் !




                                                   ’வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் அஜித்தின் 56வது படம். படத்திற்கு இசை அனிருத். அஜித் படமென்றாலே தலைப்பைக் கூட படக்குழு கடைசி நேரத்தில் தான் அறிவிப்பார்கள்.அந்தளவிற்கு படக்குழு ரகசியம் காப்பார்கள். எனினும் ரசிர்கள் படத்திற்கு இந்த பெயர் , அந்த பெயர் என தங்களது விருப்பங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இது ஒருபக்கம் எனில் அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு படத்தின் டீஸர் எப்போது என்பதுதான். விஜய்யின் ‘புலி’ டீஸர் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து புது சாதனையை எதிர்நோக்கி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் இப்போது அஜித்தின் டீஸர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காத்திருக்கிறார்கள். படத்தின் டீஸர் அக்டோபர் 1ம் தேதியும், அதே மாதம் இறுதியில் படத்தின் பாடல்களும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

                                                   படம் தீபாவளி சிறப்பாக வெளியாகும் என படக்குழு முன்பே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழு இத்தாலியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காவது வந்தால் நன்றாக இருக்கும் என்பதே அஜித் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு எனலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]