5.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்ட Meizu MX5 ஸ்மார்ட்போன் !
Meizu நிறுவனம் அதன் புதிய MX5 ஸ்மார்ட்போனை சீனாவில் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. Meizu MX5 ஸ்மார்ட்போன் 16ஜிபி வகை CNY 1799 (சுமார் ரூ.18,450) விலையிலும், 32ஜிபி வகை CNY 1999 (சுமார் ரூ.20,500) விலையிலும், 64ஜிபி வகை CNY 2399 (சுமார் ரூ.24,650) விலையிலும் கிடைக்கும். Meizu MX5 ஸ்மார்ட்போன் செவ்வாய்கிழமை முதல் முன் ஆர்டர் வரிசையில் கிடைக்கும் மற்றும் சீனாவில் சில்லறை விற்பனையாளர்களிடம் ஜூலை 5ம் தேதி முதல் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
துரதிஷ்டவசமாக, இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் விவரங்கள் பற்றி நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, மெட்டல் பாடி மற்றும் புதிய ஃபிசிக்கல் ஹோம் பட்டன் கொண்டுள்ளது. குறிப்பாக, புதிய ஃபிசிக்கல் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. Meizu MX5 ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 441ppi பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. இதில் PowerVR G6200 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 2.2GHz ஹெலியோ X10 அக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசியில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் சார்ந்த Flyme 4.5 ஓஎஸ் மற்றும் டூயல் சிம் கொண்ட இரண்டு சிம்களிலும் 4ஜி ஆதரவு உள்ளது.
இதில் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது. Meizu MX5 ஸ்மார்ட்போனில் சோனி IMX220 Exmor R BSI சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 20.7 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 aperture கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் 4K தீர்மானத்தில் வீடியோக்களை பதிவு செய்து கொள்ளும் திறன் உள்ளது.
ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 3ஜி, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 4.1, ஜி.பி.எஸ்/எ-ஜிபிஎஸ், Glonass, FM ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது. இந்த கைப்பேசியில் 3150mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 149.9x74.7x7.6mm நடவடிக்கைகள் மற்றும் 149 கிராம் எடையுடையது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.