அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!





                                                எப்போதும்  இயக்குநர் சுந்தர்.சி அலட்டிக் கொள்ளவேமாட்டார்  திடுதிப்பென சைக்கிள் கேப்பில் ஒரு படம் எடுத்து ஹிட்டும் அடித்து விடுவார். அரண்மனை அப்படி ஓசைப்படாமல் எடுத்து வெற்றி பெற்ற படம். இப்போது பேய்ப்பட சீசன். அரண்மனை 2ஐத்  தொடங்கி விட்டார். இதில் ஹன்சிகா உள்பட எக்கச்சக்க நட்சத்திரங்கள் உண்டு. சந்தானத்துக்குப் பதிலாக மட்டும் சூரி நடிக்கிறார். படத்துக்காக  இப்போது பேரமவுண்ட் கார்டனாகிவிட்ட பழைய மோகன் ஸ்டுடியோவில்ஒரு பிரமாண்ட அரண்மனை செட்  போடப்பட்டுள்ளது.அதன் செலவு ஒரு கோடி என்கிறார்கள். ஆம்பள படத்துக்கும் இங்குதான் செட் போட்டார்கள் அந்த செட்டின் மிச்ச சொச்சத்தையும் இதில் பயன்படுத்தி உள்ளார்கள். ஆம்பளை தப்பு பண்ணவில்லை லாபமே தந்தது. செண்டிமெண்டுக்கு செண்டிமெண்டும் ஆச்சு. செலவுக்கு மிச்சமும் ஆச்சு. இதுதான் சுந்தர்.சி ஸ்டைல்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]