'வேலையில்லா பட்டதாரி-2'
ஒளிப்பதிவு பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த வேல்ராஜை 'வேலையில்லா பட்டதாரி' வெற்றிப்பட இயக்குனராக்கி விட்டது. அடுத்து 'வேலையில்லா பட்டதாரி-2' எடுக்க வேல்ராஜும், தனுஷூம் விறுவிறுப்பாக இறங்கினர். அப்போது விஷாலின் 'பாயும் புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வேல்ராஜை சுசீந்திரன் அழைத்தார். பழசை மறக்காத மனுஷன் 'பாயும் புலி' யில் படுபிஸி. வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ஹீரோ ப்ளஸ் இயக்குனர் இரண்டும் தனுஷ். முதல்பாகத்தில் அம்மா, அப்பாவாக நடித்த சரண்யா, சமுத்திரக்கனி மிஸ்ஸிங். இரண்டாவதில் ராதிகா, ரவிக்குமார் தனுஷூக்கு அம்மா, அப்பா. முதல் ஜோடியான அமலாபால், இயக்குனர் விஜய் குடும்பத்தில் குத்துவிளக்கு ஏற்றச் சென்று விட்டதால் இதில் சமந்தா கூட்டணி. சினிமா படப்பிடிப்பில் தேனீயைவிட சுறுசுறுப்பாக இயங்கும் இயக்குனர் என்று கே.எஸ்.ரவிக்குமாரை புகழ்வார்கள். 'விஐபி-2' ஷூட்டிங்கில் தனுஷ், நடிகர்களிடம் வேலை வாங்கும் திறனை பார்த்து அசந்து விட்டார், ரவிக்குமார். 'நான்தான் எல்லார்கிட்டேயும் வேலை வாங்கி சீக்கிரமா படத்தை முடிப்பேன். என்னைவிட ஃபாஸ்ட்டா இருக்கார் தனுஷ்' என்று பாராட்டி தள்ளிவிட்டார், ரவி.
'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் முழு படப்பிடிப்பையும் 42 நாளில் இயக்கி முடித்து விட்டார், தனுஷ். டைரக்ஷன் செய்தது என்னவோ தனுஷ்தான். டைட்டிலில் டைரக்டர் என்று பெயர் வரப்போவது வேல்ராஜ்!