ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு !
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நாயகனாக நடித்து வரும் திரைப்படம் ஸ்ரீமந்துடு. இப்படத்தை மிர்ச்சி எனும் வெற்றி படம் கொடுத்த இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி விடும். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வரும் 18 ஆம் தேதி ஐதராபாத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிடுள்ளனர். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களை டோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நடிகை ஸ்ருதிஹாசன் நயாகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.