Vitiligo(வெண்புள்ளி ),Hyperglycemia(இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால்) மற்றும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் காட்டுச் சீரகம்
(Centratherum Anthelminticum)
இது சாலையோரங்களில் கிடைக்கும் ஒரு வகை செடியாகும். பயிரிடவும் செய்வார்கள்.
தன்மை
இது துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவை கொண்டது. உஷ்ணகுணம் கொண்டது.
இது கசப்புத் தன்மை கொண்டிருப்பதால், Vitiligo என்று சொல்லக்கூடிய வெண் புள்ளியை குணமாகும். இரத்தத்தில் நச்சுத் தன்மை அதிகரித்தல், தோள்களில் ஏற்படும் மெலனின் குறைபாடு காரணமாக ஏற்படும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால்(Hyperglycemia) ஏற்படும் விளைவுகளை தடுக்கும். ஒட்டுண்ணி(Antiparasitic),நுண்கிருமிகள்(Anti-Microbial) அகற்றி ,வலி நிவாரணியாக செயல்படும். இதில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகம் என்று ஆராய்சிகள் கூறுகின்றது.
சிறுநீரைப் பெருக்கக்கூடியது. அங்கீகரிக்கப்பட்ட சிறுநீர் என்று சொல்லக்கூடிய நிலையை உண்டாக்கும். வீக்கத்தை குறைக்கும்.இதன் துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவை, உடல் மரத்துப் போகின்ற நிலையை குணமாக்கும். வாதம், கப கோளாறுகளைப் போக்கும். விரணம் குணமாகும்.