கண்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அகத்தி
அகத்தி (அகஸ்திய )
(Sesbania Grandiflora)
தன்மை :
இது Hummingbird Tree என்றும் அழைக்கப்படுகிறது .இதன் இலை , பூ, பழம் ,பட்டை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ குணங்களை பெற்றிருக்கிறது .சுரப்பிகளைக் கண்காணித்து அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கிறது.வறட்சித் தன்மை கொண்டது .கைப்புச்சுவை (கார்ப்பு,கசப்பு,துவர்ப்பு) உடையது.வாதத்தை தோற்றுவிக்கக்கூடியது.
தீர்க்கும் நோய்கள் :
பித்தம் மற்றும் கபத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டும்.இதன் இலை கஷாயம் நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலை போக்கக்கூடியது.முற்றிய நிலையில் உள்ள ஜலதோஷம் நீங்கும்.
இதன் இலை ஒரு Laxative(மலத்தை வெளியேற்றும் தன்மை )-ஆக செயல்படுகிறது .சிறுநீரை வெளித்தள்ளக்கூடியது.
இதன் பூ கண்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.கண் மங்கலை நீக்குகிறது.தலைவலி நீங்கும் .கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது .பசியைத் தூண்டக்கூடியது.
இதன் பட்டை வற்றச் செய்யும் தன்மை கொண்டது .குளிர்ச்சியானது.சின்னம்மையை குணமாக்கும் .கசப்புத் தன்மை கொண்டதால் பேதியை குணமாக்கும்.தட்டைப் புழு,நாடாப் புழு போன்ற ஒட்டுண்ணிகளிளிருந்து பாதுகாக்கும்.காய்ச்சலை விரட்டக்கூடியது .
அகத்திப் பழங்கள் கசப்பு மற்றும் காரத் தன்மையுடையது.மலமிளக்கியாக செயல்படுகிறது.காய்ச்சல் நீங்கும்.வலி நிவாரணியாக செயல்படுகிறது .ஆஸ்துமா மற்றும் இரத்த சோகையை கண்டிக்கும் தன்மை கொண்டது.கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.வயிற்று வலி நீங்கும்.விஷத்தன்மையை முறிக்கும்.மஞ்சள்காமாலை குணமாகும் .
இதன் வேர் சளியை வெளித்தள்ளும்.வலியுடன் கூடிய வீக்கம் குணமாகும்.சைனஸ் குணமாகும்.