அரட்டை Kings ஆர்யா-கிருஷ்ணா!





                                                         கோலிவுட்டில் அரட்டை நடிகர்களில் ஆர்யாவுக்கு முதலிடம் என்றால் அதற்கடுத்த இடத்தை கிருஷ்ணாவுக்குத்தான் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருந்தால் ஒரே ஜாலி கலவரமாக இருக்கிறது. குறிப்பாக, ஆர்யா நடிகைகளைத்தான் கலாய்ப்பார் என்றால், கிருஷ்ணாவோ, நடிகர்களையும் விட்டு வைப்பதில்லை. அவர்களிடம் ஏதாவது பேசி வம்புக்கு இழுப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார். அதனால் சில நடிகர் நடிகைகள் அவரை கண்டாலே வாயை பிடுங்குவார் என்று எகிறி ஓடுகின்றனர். அந்த வகையில், இந்த பெரும் கலாய்ப்பு மன்னர்களான ஆர்யா-கிருஷ்ணா இரண்டுபேரும் , யட்சன்ட்சன் படத்தில் நடித்து வந்தபோது எந்த நேரமும் அந்த படப்பிடிப்பு தளத்தில் ஒரே அரட்டைதானாம். மேலும், ஆர்யாவைப்பொறுத்தவரை படப்பிடிப்பு தளத்தோடு தனது அரட்டையை நிறுத்திக்கொள்வார். ஆனால் கிருஷ்ணாவோ, சம்பந்தப்பட்ட படங்களின் பிரஸ்மீட், ஆடியோ விழாக்களிலும் மேடையில் மைக்கை பிடித்துக்கொண்டு நடிகர் நடிகைகளை கலாய்த்துக்கொண்டே இருக்கிறார். அதனால் கிருஷ்ணா எந்த மேடையில் ஏறினாலும் அங்கே வரும் அனைவரும் அவரது பேச்சைக்கேட்டு சிரித்துக்கொண்டயிருக்கிறார்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]