மூட்டு வலி மற்றும் குழந்தையின்மை(Infertility) வராமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
மூட்டு வலி (Rheumatoid Arthritis)
மூட்டு வலி என்பது வாத நோயினால் வரக்கூடியது.மூட்டு இணைப்பைத் தாங்கும் தன்மை சீர்கெடுவதால் ஏற்படுகிறது.உணவுப் பழக்க முறையும் ஒரு காரணமாக இருக்கிறது.இதற்கு நம் பாரம்பரிய முறையில் பயன் தரக்கூடிய ஐந்து எண்ணெய் வகைகள் உள்ளது.
வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய் ,கடுகு எண்ணெய், புங்கன் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் முதலானவற்றை சேர்த்து காய்ச்சி உள்ளுக்கு 3 முதல் 5 சொட்டுக்கள் கொடுக்க வேண்டும்.தைலமாகக் காய்ச்ச ஐந்து எண்ணெய்யுடன் கற்பூரம் மற்றும் நீலகிரித் தைலம் சேர்த்து காய்ச்சி தேய்க்கக்கூடிய சூட்டில் மூட்டுகளில் தடவி வர வேண்டும்.
அத்துடன் பவளமல்லி இலைச்சாறு (5 (அ) 6) காலை ,மாலை குடித்து வர மூட்டு வலி இல்லாமல் போகும்.
குழந்தையின்மை (Infertility)
மாதர்களுக்கு மாதவிடாய் சீரான இடைவெளியில் வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.வெள்ளைப் போக்கு அல்லது இரத்த சோகை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் , முருங்கைக் கீரை ,பேரிச்சம்பழம்,காய்ந்த திராட்சை ,கறிவேப்பிலை ,அரைக்கீரை மற்றும் வெந்தயம் போன்ற இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாசிப்பயறு அவித்த தண்ணீரை குடித்து வரலாம். உடலுக்கு சூடு தரக்கூடிய உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.