சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல்,Dysmenorrhea, இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்கும் பாரிஜாதா மூலிகை
கல்யாண முருங்கை (முர. ரோஹிதக)
(Erythrina Indica) OR (Erythrina Variegata)
(பாரிஜாதா (அ) பாரிபத்ரா (அ) இரத்தபுஷ்பா)
தன்மை
இதை Indian Coral Tree என்றும் அழைப்பார்கள். இதன் பூக்கள் பவளத்தைப் போன்ற நிறத்தைப் பெற்றிருக்கும். இதன் இலைகள், பூக்கள் மற்றும் விதைகள் மருந்தாகிறது. இலைகள் மேல்பூச்சு மருந்தாகவும், உள் உறுப்புகளுக்கும் மருந்தாகிறது. விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அகற்றுவதற்கு பயன்படுகிறது.சுவையூட்டும் பொருளாகவும், இரத்தத்தை தூய்மைப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது.
தீர்க்கும் நோய்கள்
- குன்மம், வயிற்று வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கம் குணமாகும். இதன் இலை சாறு உள்ளுக்கு குடிக்க காய்ச்சலை(Febrifuge) போக்கும். மாத விலக்கை தூண்டும். Dysmenorrhea என்று சொல்லக்கூடிய மாதவிலக்கு ஏற்படும்போது கடுமையான வயிற்று வலியை குணமாக்கும்.
- பால்வினை நோயினால், தொடை இடுக்கில் ஏற்படும் (அரை ஆப்புக்கட்டி) வீக்கத்தை, இலை பசியை மேல்பூச்சாக பூச குணமாகும். இலை சாறு காதில் விட, காது வலிகள் குணமாகும்.
- இலை சாறு(10 மில்லி 20 மில்லி) மற்றும் மோர் சேர்த்து வெறும் வயிற்றில், தினம் ஒரு வேளை,3 நாட்களுக்கு கலையில் குடித்து வர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று குணமாகும். ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
- இலை சாறு(30 மில்லி), தேன்(2 ஸ்பூன்) மற்றும் மிளகுப்பொடி(1 சிட்டிகை) சேர்த்து, காலை வெறும் வயிற்றில் எடுக்க கொழுப்புச் சத்தை குறைக்கும். Anti-Bio tic and Anti-Bacterial-ஆக செயல்படுகிறது. நார்ச்சத்து உள்ளதால், உடலுக்கு பலம் தந்து, செரிமானத்தை தூண்டும்.
கல்யாண முருங்கையின் மேலும் பல மருத்துவ குணங்களை அடுத்த பகுதியில் காணலாம்.....