முடக்கத்தான் கீரை அடை
தேவையான பொருள்கள் :
- முடக்கத்தான் கீரை --- 2 கப்
- புழுங்கல் அரிசி --- 1 கப்
- துவரம் பருப்பு ,கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு சேர்ந்து --- 1 கப்
- அவல் --- 1/2 கப்
- மிளகாய் --- 4
- கொத்துமல்லி ,இஞ்சி --- சிறிது
- உப்பு --- தேவையானது
- நல்லெண்ணெய் --- 1/4 கப்
செய்முறை :
- அரிசி,பருப்பு சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைத்து ,பின்னர் மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.அவல்,உப்பு போட்டு கலக்கவும்.
- முடக்கத்தான் கீரையைப் பொடியாக அரிந்து அரைத்த மாவில் கலக்கவும்.
- சூடான தவாவில் எண்ணெய் விட்டு தேய்த்து கலவையில் 2 கரண்டி விட்டு தட்டினாற் போல தடவவும்.சுற்றிலும் எண்ணெய் விடவும்.வெந்ததும் திருப்பி போடவும்.பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
- முடக்கத்தான் கீரை அடை தயார்.
- இந்த கலவையை சூடான எண்ணையில் உருட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.இது குறுக்கு .
தீரும் நோய்கள் :
மூட்டு வலி ,வாத நோய் வராது தடுக்கும்.