காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமையும் அமிர்த வள்ளி
தேவையான பொருள்கள்
- சீந்தில் கொடி இலை(அ) அமிர்த வள்ளி --- 3 (அ ) 4
- மிளகு --- 7
- சீரகம் --- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் --- 5
செய்முறை
சீந்தில் கொடி இலைகள் தண்ணீரில் சேர்த்து (300 மில்லி ) அதனுடன் தூளாக்கப்பட்ட மிளகுப் பொடி ,சீரகம் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம்.முதலானவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும்.200 மில்லி நீர் வற்றிய பிறகு அதை வடிகட்டி தேநீறாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்கள்
இந்த தேநீரை குழந்தைகளுக்கு ஒரு 10 சொட்டு கொடுக்க காய்ச்சல் குணமாகும்.பெரியவர்கள் என்றால் ஒரு 15 சொட்டு கொடுக்கலாம்.நல்ல மணமானது.ருசியானது.வாய் கசப்புத் தன்மையை நீக்கும்.சுரப்பிகள் நன்கு வேலை செய்து பசியைத் தூண்டும்.
இதன் வேர் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாக அமைகின்றது.அத்துடன் சிறு தானியங்கள் ,பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.