வீழ்ந்தது பாகிஸ்தான் * இலங்கை அணி வெற்றி !




                                                          பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 138, இலங்கை 315 ரன்கள் எடுத்தன. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது.

                                                        இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணியின் கருணாரத்னே 50, விதாங்கே 34 ரன் எடுத்தனர். சங்ககரா ‘டக்’ அவுட்டான போதும், பின் வந்த மாத்யூஸ், திரிமான்னே இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாத்யூஸ் (43), திரிமான்னே (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியை அடுத்து டெஸ்ட் தொடர் 1–1 என, சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், வரும் ஜூலை 3ல் பல்லேகெலேயில் துவங்குகிறது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]