செஸ்: ஆனந்த் ‘டிரா’




                                                         நார்வேயில் உள்ள ஸ்டாவன்கர் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதில் ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் நகமுரா, ஆர்மேனியாவின் ஆரோனியன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

                                                         இதன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் அலெக்சாண்டரை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த் 41வது நகர்த்தலில் போட்டியை ‘டிரா’ செய்தார்.
நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய போட்டி 72வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

                                                        மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இத்தாலியின் காருணாவை தோற்கடித்தார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url