பிரசவித்த பெண்களுக்கு சத்தான நேத்து கொட்டு பச்சடி







தேவையான பொருள்கள் :

  •   கொத்து மல்லி ---  சிறிதளவு 
  •   கறிவேப்பிலை ---  சிறிதளவு 
  •   மிளகு ---  1 ஸ்பூன் 
  •   சீரகம் ---  1/2 ஸ்பூன் 
  •   வெந்தயம் ---  1/4 ஸ்பூன் 
  •   கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு,துவரம்பருப்பு,கோதுமை,பாசிப்பருப்பு        ---  தலா 1 ஸ்பூன் 
  •   தயிர் ---  1/2 கப் 
  •   உப்பு ---  தேவையானது 

செய்முறை :

  • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு கோதுமை, மிளகு, பாசிப்பருப்பு,வெந்தயம் இவற்றை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

  • அரைத்த மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். மாவு வெந்து பளபளப்பானதும் அடுப்பை அணைக்கவும்.ஆறினதும் தயிரில் மஞ்சள் தூள்,உப்பு போட்டு கலக்கவும்.சீரகத்தை தட்டிப் போடவும்.கறிவேப்பிலை,கொத்துமல்லி பொடியாக அரிந்து சேர்த்து கலக்கவும்.நேத்து கொட்டு பச்சடி தயார்.

பயன்கள் :

  பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்க சத்தான பச்சடி.வயிற்றுக்கு இதமானது. வித்தியாசமான ருசி.பாரம்பரிய உணவை சேர்ந்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]