மாரடைப்பு வராமல் தடுக்கும் கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை (முர. ரோஹிதக)
(Erythrina Indica) OR (Erythrina Variegata)
(பாரிஜாதா (அ) பாரிபத்ரா (அ) இரத்தபுஷ்பா)
கல்யாண முருங்கையைப் பற்றி நாம் நேற்றைய பகுதியில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் அதன் மருத்துவ குணங்களை காணலாம்.
- கல்யாண முருங்கையின் இலைகளை(5 இலைகள்),வெறும் வயிற்றில் மென்று தின்ன,இன்னும் பல நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றது.
- கல்யாண இலை(6),மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி,மென்மையான பதத்தில், போதுமான சூட்டில் மூட்டுவலி, கை, கால் வலி உள்ள இடத்தில் துணி வைத்துக் கட்ட குணமாகும்.
- மாதவிலக்குக்கு முன்பு வரும் வலியைப் போக்க, துளிர் இலை(4(அ)5), பூ(7(அ)8) மற்றும் 1 டம்ளர் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, மாதவிலக்குக்கு 1 வாரத்திற்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு வலி இல்லாமல் வரும்.
- பட்டை தேநீராகக் குடிக்க, Cardio Vascular Tonic(இதய நாளங்களை பலப்படுத்தி, மாரடைப்பு வராமல் தடுக்கும். மேலும் வாத, பித்த, சிலேத்துமம் எனும் முத்தோஷ சமனிலையாக கல்யாண முருங்கை சிறப்புறுகிறது.