காலிறுதியில் சானியா ஜோடி
ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஜோடி முன்னேறியது.இங்கிலாந்தில் ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்ஸ் ஜோடி, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, நெதர்லாந்தின் மிச்செல்லா ஜோடியை எதிர்கொண்டது. இதில் அசத்திய சானியா ஜோடி 6–0, 6–2 என, 45 நிமிடத்தில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.