விரைவாதம் ,கர்ப்பப்பை நீர்க்கட்டி குணமாக்கும் கழற்சிக் காய்
கழற்சி (குபேராக்ஷி )
தன்மை
இதன் வேரின் சாறு மிகவும் கசப்புச் சுவையைக் கொண்டிருக்கும்.இளம் துளிர்கள் கசப்பும் அருவருப்பூட்டும் வகையான சுவையும் கொண்டிருக்கும்.இந்த துளிர் கஷாயம் உஷ்ணத்தைக் கொடுக்கும்.உருண்டை வடிவமான இதன் காய்களுக்குள் வெண்ணிறமுள்ள உருண்டை வடிவ பருப்பு இருக்கும்.அது கசப்புச் சுவையும் ,எண்ணெய்ப்பசையும் கொண்டிருக்கும்.
மாதவிடாயின் போது ரத்தத்தை நன்கு வெளியற்றும்.மலத்தை வெளித்தள்ளும்.இதன் இளம் துளிர்களை விளக்கெண்ணையுடன் சூடாக்கிக் கட்டினால் விரை வீக்கம் நீங்கும்.
தீர்க்கும் நோய்கள்
இதன் துளிர், வேர், காய்க்குள் இருக்கும் பருப்பு பயன் தரும்.நெஞ்சுவலி ,காய்ச்சல் ,விஷக்காய்ச்சல் ,குளிர்காய்ச்சல் ,வயிற்றில் கட்டி ,இழுப்பு ,வயிற்று உப்புசம் முதலியவற்றைப் போக்கும்.இதன் விதையை அரைத்துப் பூசினால் விரைவீக்கம் நீங்கும். இதன் எண்ணெய் பக்கவாதத்தைப் போக்கும்.
இதன் இலைக் கஷாயம் கிருமி நோய் , வாதம், காய்ச்சல் ,விரைவாதம் முதலியவற்றைப் போக்கும்.பெண்களுக்கு கர்ப்பப் பை நீர்க்கட்டி இதன் ஒரு கழற்சிக்காய் பருப்பு மற்றும் 5 மிளகு சேர்த்து அரைத்து கொடுப்பதன் மூலம் குணமாகும்.