நீர்க்கடுப்பு நீக்கும் சோற்றுக் கற்றாழை
தேவையான பொருள்கள் :
- சோற்றுக் கற்றாழை --- 75 கிராம்
- வெந்தயம் --- 2 ஸ்பூன் (ஊற வைத்தது )
- கொத்து மல்லி(நறுக்கியது) --- 2 ஸ்பூன்
- பனை வெல்லம் --- ருசிக்கேற்ப
செய்முறை :
முதலில் கசப்புத் தன்மை இல்லாத சோற்றுக் கற்றாழை எடுத்துக் கொள்ள வேண்டும்.சிவப்பு நிற திரவம் கொண்டது.250 வகையான சோற்றுக் கற்றாழைகளில் ஒன்று.இதனுடன் இரவில் ஊற வைத்த வெந்தயம் ,கொத்து மல்லி சேர்த்துக் கலக்கி ,அதனுடன் வெல்லம் சேர்க்க வேண்டும்
தீரும் நோய்கள்:
இந்த உணவை காலை ,மாலை சாப்பிட்டு வர சிறுநீர்க் கடுப்பு நீங்கும்.சிறுநீரகக் கற்கள் வராது.சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.படிந்துள்ள உப்புக்களை வெளித்தள்ளும்.சிறு நீரகத்துக்கு ஒரு அருமருந்து .