பேயை நம்பும் நயன்தாரா!






பேய்ப்பட சீசனை பயன்படுத்திக் கொண்டு பணம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் நட்சத்திரங்களுக்கும் வந்துவிட்டது. சின்ன பட்ஜெட்டில் எடுக்க தோதானது என்பதால் புதுமுகங்கள் நடிக்கும் படங்களை பேய்ப்படமாக எடுக்கத் தொடங்கினார். பலரும் ஒரே நேரத்தில் இப்படியொரு முயற்சியில் இறங்கியதால் பேய்ப்பட சீசனாகவே மறிவிட்டது. முன்னணி ஹீரோவான சூர்யாவே மாசு என்கிற மாசிலாமணி என்ற பேய்ப்படத்தில் நடிக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாகிக்கிடக்கிறது.சூர்யாவின் தம்பி கார்த்தி அடுத்து நடிக்கும் காஸ்மோரா படம் கூட பேய்ப்படம்தான்.நயன்தாரா நாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் மாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் டீஸர் கடந்த 12ஆம் தேதி வெளியானது.ஹாரர் படத்துக்கே உரிய திகில் இசையுடன் கூடிய மாயா படத்தின் டிரைலர் யூடியூப்பில் ரிலீஸாகவிருக்கிறது. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் படம் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், ரான் யோஹான் இசையமைப்பில், டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர், நிச்சயமாக ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும் என்கிறார்கள். அதோடு பீட்சா படத்திற்குப் பிறகு ரசிகர்களை டெக்னிக்கலாக மிரட்டும் ஹாரர் படமாக மாயா இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது படக்குழு.  
டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் மாயா சென்சாருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் இந்தப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறது. ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கையை வைத்தாலே வெற்றி நிச்சயம்தான்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]