சுவையான துளசி பக்கோடா






தேவையான பொருள்கள் 
  • கடலைமாவு ---  1 கப் 
  • இஞ்சித்துண்டு --- 1 ஸ்பூன் 
  • தனியாத்தூள்,மிளகாய்த்தூள் தலா ---  1 டீ ஸ்பூன் 
  • பச்சைமிளகாய் ---  2
  • கொத்துமல்லி, கறிவேப்பிலை ---  தேவையான அளவு 
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் ---  1/4 கப் 
  • துளசி  ---  1/4 கப் 
  • உப்பு ---  தேவையானது 
  • எண்ணெய் ---  தேவையானது 

செய்முறை 

  • கடலைமாவுடன், இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.


  • சூடான எண்ணெய் 1 கரண்டிவிட்டு கலக்கவும்.


  • பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துளசி சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசிறிவிடவும் .


  • சூடான எண்ணெயில் இந்த கலவை எடுத்து உதிர்த்த மாதிரி சிறு உருண்டைகளாக போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் அரித்து எடுக்கவும்.துளசி பக்கோடா ரெடி.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url