நாவறட்சி, பித்தம், இரத்ததோஷம், விஷக்கிருமி நோய்கள் போக்கும் காட்டாத்தி
காட்டாத்தி(தாதகீ)
(Woodfordia Floribunda)
சிறு செடிகளாக வளர்வதாகும். மலைப்பாங்கான இடங்களில் மிகுதியாகக் காணப்படும். இதன் இலைகள் மாதுளம் செடியின் இலைகளைப் போலிருக்கும். சற்று மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இந்த இலைகளில் காம்பு காணப்படாது. இலைகளின் கீழ்ப்பகுதி சுனை கொண்டிருக்கும்.
ஒவ்வொரு மலர்த் தண்டிலும் ஐந்து முதல் பன்னிரண்டு வரை மலர்கள் இருக்கும். மலர்கள் ஆறு இதழ்களைக் கொண்டிருக்கும். சிவந்த நிறம் கொண்டிருக்கும். குளிர்காலம் அல்லது இளவேனிற்காலத்தில் மலரும். விதைகள் கார்ப்பருவத்தில் பக்குவம் பெறும்.
தன்மை
மலர்கள் கார்ப்புச் சுவை கொண்டிருக்கும். குளிர்ந்த தன்மையுடையது. மென்மையை உண்டாக்கும். இலேசானது. இம்மரத்தின் மலர்கள் மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கின்றது.
தீர்க்கும் நோய்கள்
நாவறட்சி, அதிசாரம், பித்தம், இரத்ததோஷம், விஷக்கிருமி நோய்கள் மற்றும் அக்கி நோய்கள் குணமாகும்.