முற்றிலும் பேட்டரியால் இயங்கும் விமானம் ....
பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் இணைந்து இலத்தின் அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக பேட்டரியால் இயங்கும் விமானத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானம் இருவர் மட்டுமே அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளையும் பிரிக்கும் உலகின் 2-வது மிகப்பெரிய அணையான இட்டாப்பூர் அருகே பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 650 கிலோ எடை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் விமானம் 26 அடி நீளம் கொண்டுள்ளது.
பாலிமர் லித்தின் பேட்டரிகளால் இயங்ககூடிய இந்த விமானம் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் ஒன்றரை மணி நேரம் வரை பறக்கும் தன்மை கொண்டது. மாற்று எரிசக்தியை பயன்படுத்தி சுற்றுச்சூழலை அழிவில் இருந்து காக்கும் நோக்கத்துடன் 3 ஆண்டு கால உழைப்பில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.
தனது முதல் 5 நிமிட பயனத்தை வெற்றிகரமாக திருப்பியுள்ள விமானத்திற்கு மக்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்துள்ளனர். விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.