கட்டுக்கொடி இலையில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள்
கட்டுக்கொடி(கருடி)
(Cocculus Hirsutus)
இந்த கட்டுக்கொடி இலை ஒரு கொடி போல வேலிகளில் (அ) முட்களில் படரக்கூடியது. இதன் இலை மனிதனின் நாவைப் போன்று வடிவத்தைப் பெற்றிருக்கும். இதன் இலையை நாம் நீரில் விட்டு விட்டு எடுக்க அந்த நீரை கட்டக்கூடியது. இலைகள் துளிர் இலைகளை கொண்டிருக்கும்.
தன்மை
உடல் செழிப்புறச் செய்யும். வியர்வையை உண்டாக்கும். கெட்ட நீரை வெளியேற்றும். பேதியை உண்டாக்கி உடலை சுத்தம் செய்யக்கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
தீர்க்கும் நோய்கள்
சித்த பிரமை பிடித்தது போன்ற நிலையை குணமாக்கும். பித்தம் சமநிலைக்கு வரும். இதன் வேர்கள் கசப்பு மற்றும் காரத் தன்மை உள்ளது. மலத்தை வெளித்தள்ளும். செரிமானத்தை தூண்டக்கூடியது. சிறுநீரைப் பெருக்கக்கூடியது. தோல் நோய்களைப் போக்கும் மருந்தாக பயன்படும். இரைப்பை, குடலில் உள்ள வலியை நீக்குகிறது. வயிற்றிலுள்ள வாயுக்களை வெளித்தள்ளும்.
பாலுணர்வைத் தூண்டக்கூடியது. வலி நிவாரணி மருந்தாக பயன்படுகிறது. சளியை வெளித்தள்ளும் மருந்தாக பயன்படும். உடல் வெப்பத்தை தணிக்கும் குணம் கொண்டது. விஷக்கடி முறிக்கும். தொழுநோய் குணமாகும். செரிமானமாகாமல் ஏற்படும் குமட்டலை நீக்கும். இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்த தோஷம் நீங்கும். கபம், கபவாதம் குணமாகும். நீரிழிவு நாளடைவில் மட்டுப்படும்.
உயர் இரத்த அழுத்தத்தை குணமாகும். பால்வினை நோய்களை குணமாக்கும்.