வலிப்பு நோய் மற்றும் அல்சர் குணமாக மணத்தக்காளி மற்றும் புளியம்பிரண்டை கிழங்கு
அல்சர் (குடல்புண்)
சாப்பிடுவதற்கு முன்பு வயிற்று எரிச்சலுடன் வலி இருக்கும் .ஆரம்ப கட்டத்தில் செரிமானத் தன்மை பாதிக்கப்பட்டு,வயிற்றிலுள்ள வாயுவானது நீண்ட நாட்களுக்கு வெளியாகிக் கொண்டு இருக்கும்.குடல் புண் உள்ளவர்கள் இரவு நேரத்தில் குளிர்ச்சி தரக்கூடிய ,எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தயம் இதற்கு ஒரு நல்ல உணவாக பயன்படும்.உளுந்தந்கழி சாப்பிட்டு வர குடல்புண் ஆறும்.அத்துடன் மணத்தக்காளி கீரையை சூப்பாக செய்து சாப்பிடலாம்.உள்ளிருந்து வரும் வாயுவை அகற்ற, ஓமம் (50 கிராம்), சுக்கு(10 கிராம்), பனைவெல்லம் (100 கிராம்) எடுத்து ,நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர வாயுப் பிரச்சனை நீங்கும்.
வலிப்பு நோய்(ஜன்னி)
புளியம்பிரண்டை கிழங்கு (10 கிராம் ), சின்ன வெங்காயம்(50 கிராம்),சீரகம்(20 கிராம் ) மற்றும் வெற்றிலை (3) முதலானவற்றை அரைத்து ,விழுதாக்கி 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து ,50 மில்லி வற்றச் செய்து 3 நாட்களுக்கு ஒரு முறை கொடுத்து வர குணமாகும்.
அதனுடன் சேர்த்து, எட்டிக்குச்சி கையில் (அ) காதில் வைத்து கட்டுவதால் வலிப்பு நோய் குணமாகும்.