ஆண்களின் மலட்டுத் தன்மையை குணமாக்கும் மூலிகை
அதிமதுரம் (மதுயஷ்டி)
(Glycyrrhiza glabra)
தன்மை :
இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .அதிக அல்லது இயற்கையான இனிப்புச் சுவை கொண்டது .அதிக மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.கண்களுக்கு நலம் தரக்கூடியது.கண் நோய்களை தடுக்கக்கூடியது.உடலுக்கு வலிமை தரக்கூடியது.இதன் மருத்துவ குணம் விந்துவின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.அதன் பயனத்தன்மையை அதிகப்படுத்துகிறது.குரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கி,குரலை தெளிவாக்கும்.
தீர்க்கும் நோய்கள் :
பித்தம் மற்றும் வாதத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.மஞ்சள் காமாலை,எலும்பு சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும்.இரத்த சுத்திகரிப்பானாக செயல்பட்டு,உள்ள உறுப்புகளை பலப்படுத்துகிறது.உள் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம்,விரணம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
அதிமதுர வேர் காக்கை வலிப்பு,மூக்கில் இரத்தம் வடிதல்,படர்தாமரை மற்றும் தாகத்தை குணமாக்கும்.குடலில் உள்ள செரிமானம் ஆகாத நச்சுக்களை வெளியற்றி ,உள்ள உறுப்புகளை சுத்தப்படுத்தம்.வாந்தி ஏற்படுதல் குணமாகும்.நாவறட்சியால் அவதிப்படுவோர் அதிமதுரத்தை எடுத்துக் கொள்ளலாம் .மிக முக்கியமாக,ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கி,சுகபோக வாழ்வழிக்கும் ஒரு அருமருந்து.