அஜீத்தின் வீட்டை அலங்கரிக்கும் சமையல் போட்டோக்கள்!





அஜீத் ஒரு கிச்சன் கில்லாடி என அனைவரும் அறிந்ததே. அதை தனது வீட்டோடு நிறுத்திக்கொள்ளாமல், படப்பிடிப்புகளிலும் அவ்வப்போது சமையல் செய்து தனது சமையல் திறமை நிரூபித்து வருகிறார்.மேலும், சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால்,அங்குள்ள ஹோட்டல்களில் ஏதேனும் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டால் அவற்றைப்பற்றிய சில டிப்ஸ்களை அங்கிருப்பவர்களிடம் பெற்று வந்து, சென்னை வந்ததும் தனது வீட்டில் இருப்பவர்களுக்கும் அந்த உணவுகளை சமைத்து கொடுக்கிறாராம் அஜீத்.அந்த வகையில், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் ஏதேனும் ஸ்பெசல் அயிட்டங்களை குடும்பத்தாருக்கு சமைத்துக்கொடுக்கும் அஜீத், தான் சமைப்பதை போட்டோ எடுக்க வைத்து, தனது இல்லத்திலும் அதை ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறார்.  
ஒரு பிரபல நடிகர் தான் சமைப்பதை விதவிதமான போட்டோ எடுத்து மாட்டியிருப்பதால அவரது வீட்டிற்கு செல்வோர் முதலில் அந்த போட்டோக்களைத்தான் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]