வயிற்றுக் கோளாறுகள் மற்றும் ஜீரண சக்தியை பலப்படுத்தும் அங்காயபொடி
அங்காய பொடி
தேவையான பொருள்கள்
- சுண்டை வத்தல் --- 1 ஸ்பூன்
- மணத்தக்காளி வத்தல் --- 1 ஸ்பூன்
- தனியா --- 1 ஸ்பூன்
- வேப்பம்பூ --- 1 ஸ்பூன்
- சுக்குப்பொடி, ஓமம் தலா --- 1 ஸ்பூன்
- சீரகம், மிளகு தலா --- 1 ஸ்பூன்
- உப்பு --- தேவையானது
- நெய் --- 1 ஸ்பூன்
செய்முறை
- வாணலியில் சிறிது நெய்விட்டு உப்பு தவிர எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் உப்பு கலந்து மிக்சியில் போட்டு பொடி செய்யவும்.
- அங்காயபொடி தயார்.
பயன்கள்
சாதத்தின் மீது 2 ஸ்பூன் அளவு பொடி போட்டு நெய் 1 ஸ்பூன்விட்டு கலந்து சாப்பிட ஏற்றது. இந்த பொடி ஜீரண சக்தியைத் தூண்டும். வயிற்று உப்புசம், எதுக்கழிப்பது சரியாகும். பசியைத் தூண்டும். மலச்சிக்கல் போகும்.