இந்திய வீரர்களை அவமானம் செய்யும் வங்கதேச விளம்பரம் !......


                                        இந்திய கிரிக்கெட் வீரர்களை வங்கதேச பத்திரிகை ஒன்று மோசமாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 1–2 என இழந்தது. இதில் 19 வயதான வங்கதேச இளம் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட் சாய்த்தார். 
                                       தற்போது, இந்திய அணியின் தோல்வி தொடர்பாக வங்கதேச வாரப்பத்திரிகை ஒன்று மோசமான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் தோனி, கோஹ்லி, ரகானே, ரோகித் சர்மா, ஜடேஜா, ஷிகர் தவான், அஷ்வின் ஆகிய 7 இந்திய வீரர்கள் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இவர்களது தலைமுடி பாதி ‘ஷேவ்’ செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலே, ரஹ்மான் கத்தியுடன் நிற்கிறார். அதாவது, இவர்தான் இந்திய வீரர்களின் தலைமுடியை பாதியாக குறைத்ததாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரசிகர்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url