தித்திப்பான கரும்புகளின் வகைகளும், அவற்றின் மருத்துவ குணங்களும்
கரும்பு
(Saecharumalbum)
கரும்பில் மொத்தம் பதின்மூன்று வகைகள் உள்ளன . பௌண்ட்ரகம், பீருகம், சதபோரகம், காந்தாரம், தாபசேக்ஷூ, காஷ்டேக்ஷூ, ஸூசிபத்ரகம், நைபாளம், தீர்கபத்ரகம், நீலபோரம், கோசகம் மற்றும் மனோகுப்தா.
- பௌண்ட்ரகம், பீருகம் என்பவை இரண்டும் மிக்க இனிப்புச் சுவை கொண்டது. மிக்க குளிர்ச்சியானது. உடலை செழிக்கச் செய்யும். வாதம், பித்தம் போக்கும்.
- கோசகம் பளுவானது. இரத்தபித்தம், ஈளைக்காச நோய் குணமாகும். காந்தாரம் என்பது(கருமையான கரும்பு) பளுவானது. கபத்தை வளர்க்கும். புஷ்டியைத் தரும்.
- வம்சகம் என்பது நீண்ட இடைவெளியுள்ள கணுக்களை கொண்டது. மிகக் கடினத் தன்மை கொண்டது. உவர்ப்புத் தன்மை உடையது.
- சதபோரகம் பலகணுக்களைக் கொண்டது. உஷ்ணத் தன்மை கொண்டது. உவர்ப்புச் சுவை உள்ளது. வாதத்தைப் போக்கும்.
- தாபசேக்ஷூ என்னும் கரும்பு மென்மைத் தன்மை மற்றும் இனிப்புச் சுவை கொண்டது. சுவை தரும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். வலிமையைத் தரும்.
- காஷ்டேக்ஷூ என்பது தாபசேக்ஷூ கரும்பைப் போன்றது. ஸூசிபத்ரகம் என்பது ஊசி போன்ற இலைகளைக் கொண்டது. அத்துடன் நைபாளம், தீர்கபத்ரகம் மற்றும் நீலபோரம் என்பன வாதத்தை வளர்க்கும். கபம், பித்தம், இரத்தபித்தம் குணப்படுத்தும்.
- மனோகுப்தா என்னும் கரும்பு வாதம், நாவறட்சியுடன் கூடிய நோய்களைப் போக்கும். மிக்க குளுமைத் தன்மை கொண்டது. இனிப்புச் சுவை மிகுந்தது. இரத்த பித்தத்தைப் போக்கும்.
தன்மை
இனிப்புச் சுவை ,எண்ணெய்ப்பசை கொண்டது. குருகுணம் கொண்டது. சிறுநீரைப் பெருக்குதல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். குளிர்ச்சி கொண்டது. உடலுக்கு பலம் தரும்.
தீர்க்கும் நோய்கள்
- வாதம், பித்தம் மற்றும் இரத்தபித்தம்.