நோவோக் ஜோகோவிச்சுடன் காலிறுதியில் மோதுகிறார் ரபேல் நடால்





                    உலகின் முதல் நிலை வீரரான நோவோக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய  ஆட்டத்தில் பிரான்ஸ்-ன் ரிச்சர்ட் காஸ்கட் -ஐ 6-1, 6-2, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

        இன்னொரு பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின்-ன் ரபேல் நடால்,அமெரிக்காவின் ஜேக் சாக்-ஐ 6-3,6-1,5-7.6-2 என்ற செட்களில் தோற்கடித்து ,10-வது சுழற்கோப்பையை வெல்லும் முனைப்புடன்  காலிறுதியில் செர்பிய வீரரை சந்திக்க இருக்கிறார் .பிரெஞ்சு ஓபனைப் பொறுத்த வரை நடாலுக்கு இது 70-வது வெற்றியாகும்.

                  போட்டி முடிந்தவுடன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த நடால் ,"களிமண் ஆடுகளத்தில் ஆடுவது மிகப்பெரிய சவாலாகும்"என்றார் .செர்பிய வீரர் நோவோக் ஜோகோவிச்சை பற்றி கேட்டதற்கு,"அவர் உலகின் நம்பர் ஒன் வீரர்.இந்த சீசனில் அவர் நன்றாக விளையாடி வருகிறார்.நான் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி , அவருக்கு சவாலாக இருப்பேன் " என்றார்.

By KATHIRESAN
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url