அறிந்திராத ரகசியங்கள்:விஜய்யின் புலி!




                                                       விஜய் நடித்து வரும் புலிதான் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படம். இதுவரை அவர் நடித்திராத கேரக்டர், கதை களம். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை பற்றிய அதிகாரபூர்வ முதல் தகவல்கள் சில...

                                                       ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்கு பிறகு சிம்பு தேவன் இயக்கும் படம். ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற இரண்டு வித்தியாசமான படங்களை தந்தவர். படத்தை தயாரிப்பது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சிபு தமீன்ஸ் (இவர் விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தர்).

                                                      படத்தில் விஜய்க்கு இரண்டு வேடம். ஒன்று சரித்திரகால வேடம். போர்படை தளபதி. அந்த கேரக்டரின் பெயர்தான் புலி. நிகழ்கால கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சரித்திரகால விஜய்க்கு ஹன்சிகா ஜோடி, இளவரசியாக நடித்திருக்கிறார். நிகழ்கால விஜய்க்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு 80களின் கனவு கன்னி ஸ்ரீதேவி ரீ-என்ட்ரியாகிறார். அவர் மகாராணியாகவும், ஹன்சிகாவின் தாயாகவும் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். "வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே..." என்ற பாடலை விஜய் பாடி உள்ளார். "புலி வருது... புலி வருது..." என்ற தீம் மியூசிக்கும் உண்டு. பாலிவுட் ஒளிப்பதிவாளரும், கோலிவுட் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒவ்வொரு காட்சியும் 5 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது. கேமரா யூனிட்டில் மட்டும் 20 பேர் பணியாற்றியுள்ளனர். "போரும் காதலும்" என்பதுதான் கதையின் ஒண் லைன். போரில் வெற்றி தோல்வி சகஜம், காதலிலும் வெற்றி தோல்வி சகஜம். போரில் தோற்றல் மீண்டும் ஜெயிக்கலாம். காதலில் தோற்றால் மீண்டும் ஜெயிக்க முடியாது. இதற்குள்தான் இருக்கிறது புலியின் கதை. படத்தின் வாள் சண்டையை வடிமைத்திருப்பது சீன சண்டைக் கலைஞர்கள்.

                                                   
                                                   
                                                           விஜய் 5 கிலோ எடைகொண்ட நிஜமான வாளை தூக்கி சண்டை போட்டிருக்கிறார். நான் ஈ சுதீப் வில்லன். விஜய், சுதீப் இடையிலான ஆக்ரோஷமான சண்டை காட்சியை திலீப் சுப்பராயன் வடிமைத்துள்ளார்.  அட்டகத்தி நந்திதா, பிரபு, தம்பி ராமய்யா, சத்யன், இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர், பாலிவுட் நடிகர் டினு ஆனந்த், தெலுங்கு நடிகர் ஆரி ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்கள். படத்தின் பிரமாண்ட செட்டுகளை போட்டிருப்பவர் கலை இயக்குனர் முத்துராஜ். முத்துராஜும் இயக்குனர் சிம்புதேவனும் இணைந்துதான் படத்தின் ஆடை வடிமைப்பை செய்திருக்கிறார்கள். மகதீரா, நான் ஈ படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த கமல கண்ணன் தான் புலியின் கிராபிக்ஸ் பணிகளைச் செய்கிறார்.

                                                       ஆந்திராவில் உள்ள தலக்கோணம், திருப்பதி, கேரளாவில் உள்ள வாகமன், சாலக்குடியில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நாள் அன்று விஜய் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து திருப்பதி லட்டும், தங்க நாணயமும் பரிசாக கொடுத்திருக்கிறார்.

                                                        படத்தின் பட்ஜெட் பெருசு. பட்ஜெட்டை விட கூடுதல் தொகைக்கு விற்பனையும் ஆகிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பே லாபத் தொகைக்கு விற்றிருப்பது புலி தான்.
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]