மலச்சிக்கல் ,இதய நோய் குணமாக்கும் இஞ்சி
இஞ்சி(ஆர்த்ரகம்)
(Zingiber officinale Roscoe)
தன்மை :
மலமிளக்கியாக பயன் தரும்.உஷ்ண வீரியம் கொண்டது.பசியைத் தூண்டக் கூடியது.காரத் தன்மை உடையது.உணவிற்கு சுவையூட்டும் பொருளாக பயன்படுகிறது.
தீர்க்கும் நோய்கள் :
அஜீரணம் குணமாகும் .வாந்தி ,இருமல் குணமாகும்.உள் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம்,வலிகளைப் போக்கும் .இதயத்திற்கு இது ஒரு பாதுகாப்பு அரணாக அமைகிறது.இதய நோய் அத்துனையும் குணமாகும்.யானைக்கால் வீக்கம் குணமாகும்.இது ஒரு அகட்டு வாய்வு அகற்றியாக செயல்பட்டு,வயிற்றிலுள்ள வாயுக்களை வெளித்தள்ளும்.இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் பூசிகள்,புண்கள் ஆறும்.
வாத நோய்கள் குணமாகும்.புற்று நோய் புண்களை ஆரம்பத்திலே கண்டறிந்து கொடுத்தால் குணமாகும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.