மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் குழந்தைகளுக்கு சளியைப் போக்கும் வேலிப்பருத்தி இலை
வழிமுறை
- இலை சாறு (10 மில்லி ) மற்றும் சிறிது உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க சளியை வாந்தியாக வெளித்தள்ளும்.கருப்பையை தூண்டும்.
- இலை சாறு (5 மில்லி முதல் 10 மில்லி ) , சுக்கு (1/2 ஸ்பூன் ) மற்றும் தேன் சேர்த்து மாதர்களுக்குக் கொடுக்க வேண்டும். இது கருப்பை சம்பத்தப்பட்ட அத்தனை நோய்கள், வலிகளைப் போக்கும். Dismenoria(மாதவிடாய் வலியுடன் போதல் ), Menoragia(அடிவயிற்று வலியுடன் போதல் ) , Aminoria(இரண்டு (அ ) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போதல் ) இந்த நிலையில் இதை எடுத்துக் கொள்ள மாதவிடாய் சீரான நிலைக்கு வரும்.
- இதன் இலைப்பசை மற்றும் சுண்ணாம்பு சமபங்கு சேர்த்து தீயில் இளைத்து, கால் வீக்கங்களுக்கு பற்றாக போடலாம் .இலை பசையை சாப்பிட்டு வர கருப்பை டானிக்-ஆக செயல்படும்.
- இதன் இலை(1 கைப்பிடி), சுக்குத்தூள் (1/2 ஸ்பூன்), மிளகு(1/2 ஸ்பூன்) அத்துடன் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , வடிகட்டி உப்பு (அ) பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம். அன்றாடம் குடித்து வர மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி நீங்கும்.பெண்களுக்கு இது ஒரு அருமருந்து.