கர்ப்பப் பை புண்களை ஆற்றும் கோழிக்கீரை உணவு
தேவையான பொருள்கள் :
- கோழிக் கீரை --- அளவுக்கேற்ப
- சிறு பருப்பு --- 4(அ)5 டீ ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் --- 3
- நறுக்கிய தக்காளி --- 2
- பச்சை மிளகாய்(காம்பு நீக்கியது)--- 4(அ)5
- பெருங்காயத் தூள் --- தேவையான அளவு
- மிளகுத் தூள் --- 1/2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் --- 1/2 சிட்டிகை
- நல்லெண்ணெய் --- தேவையான அளவு
- கடுகு --- சிறிதளவு
- காய்ந்த மிளகாய் --- 2
- கறிவேப்பிலை --- சிறிதளவு
- உப்பு --- சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் 200 மில்லி லிட்டர் நீரில் ,சிறுபருப்பு 4(அ ) 5 டீ ஸ்பூன் போட வேண்டும்.நன்கு வேக வைத்த சிருபருப்புடன் கோழிக்கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும்.நன்றாக வெந்தவுடன் ,நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய தக்காளி ,பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து ,ஓரிரு நிமிடங்கள் கொதி வந்த பிறகு 1/2 டீ ஸ்பூன் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும்.மஞ்சள் தூள் 1/2 சிட்டிகை சேர்க்க வேண்டும்.இறுதியாக சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.நல்ல பதம் வந்தவுடன் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து கடுகு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.வாசனைக்காக 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.இவை நன்கு வதங்கியவுடன் ,தயாரித்த பருப்புக் கூட்டில் சேர்க்க வேண்டும்.
இதை தோசை ,இட்லி மற்றும் சுடு சாதத்துடன் சாப்பிடலாம்.
தீரும் நோய்கள் :
இது குளிர்ச்சித் தன்மை கொண்டது.கர்ப்பப் பை புண்கள் ஆறும்.வாய்ப் பகுதி புண்கள் ஆறும்.குடல் புண்கள் ஆறும்.இந்த கீரையை 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.