சில டைனோசர்கள் மட்டும் ஏன் மிகப் பெரிய உருவத்தைப் பெற்றிருக்கின்றன?
தாவரத்தை உண்டு வாழும் டைனோசர்கள் மிகப் பெரிய உருவம் கொண்டது.Mamenchisaurus(Sauropods) கழுத்து மட்டும் 11மீ (36அடி) மற்றும் உடல் மிகப் பெரியது.சௌரோபாட்ஸ் என்கிற இனம்தான்,200 முதல் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஜுராசிக் மற்றும் க்ரிடேசியஸ் காலங்களில் அரிதாகக் காணப்பட்ட டைனோசர் இனங்களில் ஒன்றாகும்.இந்த மிகப் பெரிய தாவர உண்ணி அதன் எதிரிகளை எளிதில் கண்டு கொள்ளும்.
டைனோசர் மண்டை ஓடுகள் மென்மையான எலும்புகளால் ஆனது.அதனால் புதை படிமங்களாகக் கண்டறிவது கடினம்.அறிவியல் அறிஞர்கள் தனித் தன்மை வாய்ந்த சௌரோபாட் இனத்தின் புதை படிமங்களை கண்டறிய முடியவில்லை.அதன் பிறகு 100 வருடங்கள் கழித்து Apatosaurus எனும் டைனோசரின் மண்டை ஓட்டை கண்டுபிடித்தனர்.
Camarasaurus எனும் Sauropods இனத்தை சார்ந்த டைனோசரின் வால் பகுதியில் 53 எலும்பு இணைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.2.45மீ (8அடி)நீளம் கொண்ட பெரிய தோள்களுடன் கூடிய Brachiosaurus எனும் Sauropods புதை படிமங்களாகக் கிடைத்தது.Diplodocus எனும் டைனோசரின் கழுத்தானது 1.8மீ(6அடி) நீளம் கொண்ட பெரிய முதுகெலும்புப் பிராணியாகும்.
Diplodocus(Sauropod) இனமானது அதன் மிகப் பெரிய தட்டையான வால் பகுதியை தரையில் அடித்து ஒரு இடி விழுவது போன்ற சத்தத்தை எழுப்பி மற்ற டைனோசர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.டைனோசரஸ் பற்றிய மேலும் பல தகவல்களை வரும் பகுதிகளில் காணலாம்.