தாய்ப்பால் சுரக்கும் மற்றும் சுகர்-ஐ குறைக்கும் பப்பாளிக் காய் கூட்டு
தேவையான பொருள்கள்
- பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் --- 1 கப்
- பாசிப்பருப்பு --- 1/4 கப்
- தேங்காய்த் துருவல் --- 2 ஸ்பூன்
- மிளகாய் --- 2
- கடுகு --- 1/2 ஸ்பூன்
- சீரகம் --- 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் --- 1/2 டீ ஸ்பூன்
- உப்பு --- தேவைக்கு ஏற்ப
செய்முறை
- பப்பாளி கையுடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், குழைய வேக வைக்கவும்.
- கடுகு, மிளகாய்வத்தல், சீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து மைய அரைக்கவும்.
- வெந்த கையுடன் அரைத்த விழுதைச் சேர்த்து உப்புடன் கொதித்ததும் தீயை நிறுத்தி விடவும்.
- பப்பாளிக்காய் கூட்டு தயார்.
பயன்கள்
எல்லாவற்றிற்கும் ஏற்ற சைட் டிஷ். வாய்வுக் கோளாறு, உடல்வலி நீங்கும். தாய்ப்பால் சுரக்கும்.சுகர் குறையும்.குடலில் சேரும் கிருமிகளை வெளியேற்ற உதவும்.