மஞ்சள்காமாலை, வயிற்றுவலிகட்டி, மண்ணீரல்வீக்கம், சிறுநீர்ப்பையில் தோன்றும் கல் ,நீர்ச்சுருக்கு குணமாக்கும் கடுக்காய்




                                 கடுக்காய் (அபயா)
                              (Terminalia Chebula)

       திரிபலா என்று சொல்லக்கூடிய கடுக்காய்,நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய உயர்தரமான மூன்று பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.இதைப் பற்றி மற்றொரு பகுதியில் காணலாம்.இந்த கடுக்காய் என்றும் இளமையாக வைத்திருக்கும் மூலிகைகளில் ஒன்று.பல்வேறு மொழிகளில் கடுக்காயை பின்வருமாறு அழைப்பார்கள் :


  • Hindi name – Harad, Harade
  • English name – Chebulic Myrobalan
  • Telugu name – karakkaya
  • Tamil name – Kadukkai
  • Gujarathi name – Harade
  • Arabian name – Haleelaz
  • Farsi name – Haleel


  கடுக்காய்களில் ஏழுவகையுண்டு :-
1) சுரைக்காயைப் போலுள்ளது விஜயா. இது எல்லா நோய்களையும் போக்க வல்லது.
2) உருண்டை வடிவம் கொண்டது ரோகிணி எனப்ப்படும். இது காயங்களை ஆற்றும்.
3) சதைப்பகுதி மெல்லியதாகவும், கொட்டை பெரியதாகவும் உள்ளது பூதனா எனப்படும். இது உடல் மேல்பூசுக்குச் சிறந்தது.
4) சதைப்பற்று அதிகமாகவும், விதை சிரியதாகவுமிருப்பது அமிருதா எனப்படும். இது மலத்தை வெளியேற்றுவதற்கு சிறந்தது.
5) மேல் பகுதியில் ஐந்து கோடுகளைக் கொண்டது. அபாயா எனப்படும். இது கண் நோய்களைப் போக்கவல்லது.
6) பொன்னிறம் கொண்டது. ஜீவந்தி  எனப்படும். எல்லா நோய்களையும் போக்கவல்லது.
7) மேற்பகுதியில் மூன்று  கோடுகளைக் கொண்டது சேதகீ  எனப்படும். தூளாக்கிப் பயன்படுத்தச் சிறந்தது. சேதகீ என்பது கருப்பு வெளுப்பு என்னும் இரண்டு நிறங்களிலும் காணப்படும். வெண்சேதகீ  ஆறங்குல நீளமும், கருநிறமுள்ளது ஓரங்குல நீளமும் கொண்டிருக்கும்.


தன்மை     

    எல்லா வகை கடுக்காய்களும் மலத்தை வெளித்தள்ளும். சில நுகர்ந்ததும், சில உட்கொண்டதும், சில கையால் தீண்டியதும், சில கண்களால் பார்த்ததும் மலத்தை வெளியேற்றும் தன்மை கொண்டவை.கடுக்காயில் உப்புச்சுவை தவிர மற்ற இனிப்பு,கசப்பு,துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவைகள் உள்ளன. குறிப்பாக துவர்ப்புச் சுவை மிகுந்திருக்கும். இது வறட்சி ,சூடு மற்றும் அக்னியை வளர்க்கும். 

      பக்குவம் அடையும்போது இனிப்புச்சுவை கொள்ளும். கண்களுக்கு நன்மை பயக்கும். ஆயுளை வளர்க்கும். உடலை வளர்க்கும். வாதத்தை தணிக்கும்.

தீர்க்கும் நோய்கள் 

   இருமல் குணமாகும். நீரிழிவு மூலம் ஏற்படும் குட்டம், வீக்கம், பெருவயிறு, கிருமிநோய், அக்கி, வயிற்று உப்புசம், விஷக்காய்ச்சல், குன்மம், விரணம், வாந்தி மற்றும் தொண்டை இதயங்களில் தோன்றும் நோய்கள் குணமாகும்.

  மஞ்சள்காமாலை, வயிற்றுவலிகட்டி, மண்ணீரல்வீக்கம், சிறுநீர்ப்பையில் தோன்றும் கல் ,நீர்ச்சுருக்கு , சிறுநீர் தடைபடுதல் முதலிய நோய்களை தணியச் செய்யும் குனமுள்ளதாகும். இனிப்பும் கசப்பும் கொண்டுள்ளதால் பித்தத்தையும், துவர்ப்பும் கார்ப்பும் கொண்டுள்ளதால் கபத்தையும் ,புளிப்புச்சுவை கொண்டுள்ளதால் வாதத்தையும் தணிக்கும்.

 கடுக்காயை உப்புடன் சேர்த்து உட்கொண்டால் கபத்தையும், சர்க்கரையுடன் சேர்த்து உட்கொண்டால் பித்தத்தையும் ,நெய்யுடன் சேர்த்து உட்கொண்டால் வாதத்தையும் போக்கும்.

பயன்படுத்தத் தகாதவர்கள் 

  உடல் வலிவு இல்லாதவர்கள், வறண்ட உடல் கொண்டவர்கள் ,மிக்க இளைத்தவர்கள் , உடலில் பித்தம் மிகுந்துள்ளவர்கள் , உடலில் இரத்தம் இல்லாதவர்கள் , கருவுற்ற தாய்மார்கள் ஆகியோர்கள் கடுக்காயைப் பயன்படுத்தக்கூடாது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]