பித்தப்பை நோய்கள், எரிச்சலோடு போகும் சிறுநீர் மற்றும் மஞ்சள் காமாலையை குணமாக்கும் முள்ளங்கி
முள்ளங்கி (மூலகா)
(Raphanus Sativus)
இது சிறுசெடியாகும். இதன்வேர் பருத்து நீண்டு இருக்கும். இதுவே முள்ளங்கியாகும். இது இரு வகைப்படும். சிறு முள்ளங்கி, யானையின் தந்தம்போல் பருத்து காணப்படும். மற்றொன்று நேபாள முள்ளங்கி (அ) பெரிய முள்ளங்கி.
தன்மை
- இதில் பாஸ்பரஸ், கந்தகம், சுண்ணாம்பு, வைட்டமின்-சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் கீரை கசப்புத் தன்மை கொண்டது. மேலும் கார்ப்புச்சுவை , உஷ்ணத்தன்மை கொண்டது. சுவையூட்டுவது ,எளிதில் செரிமானமாகக்கூடியது.குரலை சுத்தப்படுத்தும்.
- பெரிய முள்ளங்கி மூன்று தோஷங்களையும் வளர்க்கும். ஆனால் எண்ணெயில் பக்குவம் செய்தால் மூன்று தோஷங்களையும் போக்கும்.
- Broad Spectrum Anti Bio-tic-ஆக செயல்படும். பித்தப்பையில்(Carl Bladder) உள்ள அனைத்து நோய்களையும் போக்கும். சிறுநீரக எரிச்சலை நீக்கும்.
தீர்க்கும் நோய்கள்
- முள்ளங்கி சாறு(50மில்லி முதல் 100மில்லி) மற்றும் சர்க்கரை(தேவையானது) சேர்த்து உள்ளுக்கு சாப்பிட, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். எரிச்சலோடு போகும் சிறுநீர் குணமாகும்.
- முள்ளங்கி இலை சாறு(50 முதல் 100 மில்லி) மற்றும் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடிக்கும் பொழுது, மஞ்சள் காமாலையை குணமாக்கும்.
முள்ளங்கி பற்றிய மேலும் பல அரிய மருத்துவ குணங்களை அடுத்த பகுதியில் காணலாம்....
உபயோகமாக இருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.