மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அசோகா மரம்
அசோக மரம் (அசோக )
(Saraca Asoca)
தன்மை :
இந்த மரம் மழை அதிகமாகப் பெய்யும் காடுகளில் காணப்படுகிறது.தக்காண பீடபூமி மற்றும் மேற்கு கடற்கரையோரங்களில் இந்த மரங்கள் அதிகம் இருக்கும்.குளிர்ச்சித் தன்மை கொண்டது.கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை இருக்கும்.உடலுக்கு பொலிவு தரக்கூடியது.பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும் மருந்தாக பரிந்துரை செய்யப்படுகிறது.
தீர்க்கும் நோய்கள் :
வாத,பித்த,கபம் என்ற மூன்று தோஷங்களினால் ஏற்படும் சிரமங்களை குணப்படுத்தும்.மெனோரேஜியா எனும் நிலையிலே இதன் இலைகள் நல்ல மருந்தாக பயன்படுகிறது.இந்த மாதவிடாய் மாதத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேல் வரும்பொழுது ஏற்படும் நாவறட்சி நின்று விடும்.வலியுடன் கூடிய மாதவிடாய் (Dysmenorrhea),பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ,இதன் துவர்ப்புத் தன்மை உதிரப்போக்கு உள்ள இடத்தை குணமாக்கும் .
உடல் பலவீனமின்மை இதனால் சரி செய்யப்படும்.நஞ்சு அல்லது விஷத்தன்மையை நீக்கக்கூடியது. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.மாதர்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நாளடைவில் குணமாகும்.
By Kathiresan