ரோமியோ ஜூலியட் விமர்சனம்
ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடித்து, லக்ஷ்மன் இயக்கத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருத்தன் எனும் கருத்தை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான் ரோமியோ ஜூலியட். டி.இமானின் இசையில், அனிருத் ரவிச்சந்தர் பாடிய டண்டணக்கா... பாடலின் மூலம் படம் ரிலீஸாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பட்டி தொட்டியெங்கும் எதிர்பார்ப்பையும், டி.ராஜேந்தரின் எதிர்ப்பையும் கிளப்பிய ரோமியோ ஜூலியட் என்ன கதை, எப்படி இருக்கிறது.?
கதைப்படி பெற்றோர், உற்றார், உறவினர் யாருமில்லாத ஜூலியட் ஹன்சிகா, ஒரு ஹோமில் வளர்ந்து ஆளாகிறார். ஆளான பின் ஏர்ஹோஸ்டர்ஸாக விமானத்தில் பணிபுரியும் அம்மணி, தோழிகளுடன் ஒரு வசதியான குடியிருப்பில் வசிக்கிறார். எதையும் நெகட்டீவ்வாக யோசிக்கும் ஹன்சிகா, பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார். அதன் வெளிப்பாடாக பாசிட்டீவ் பிரியரான ரோமியோ -கார்த்திக் எனும் ஜெயம் ரவியை, பணக்காரர் கெட் - அப்பில் பார்த்து காதலிக்க தொடங்குகிறார்.நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், உள்ளிட்ட பெரும் புள்ளிகளின் &ஜிம்& கோச்சரான ஜெயம் ரவி தொழில் நிமித்தம், படத்தயாரிப்பாளர் விடிவி கணேசின் பென்ஸ் காரிலும், காசிலும் பவனி வருவது, ஹன்சிகாவுக்கு ரவியை வசதியானவராகவும், பெரும் புள்ளியாகவும் காட்டுகிறது. அதனால் ரவி பின்னால் அலைந்து திரிந்து அவரை காதலிக்க தொடங்குகிறார் ஹன்சிகா. ஒருக்கட்டத்தில் ரவி, வசதியானவர் அல்ல, வசதி படைத்தவர்களின் ஜிம் கோச்சர் எனும் உண்மை ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது. காதல் பணால் ஆகிறது. ஆனால் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் கொள்கை உடைய ரவி மீண்டும், ஹன்சிகாவுடன் கை கோர்த்தாரா.? அல்லது ஹன்சிகா வசதியான வேறு ஒருவருக்கு மாலையிட்டு மகிழ்ந்தாரா.? என்பது தான் ரோமியோ ஜூலியட் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!
ஜெயம் ரவி - கார்த்திக் எனும் ஜிம் கோச்சராக செம கெத்தாக இருக்கிறார். டண்டணக்கா பாடலில் டி.ஆரின் ரசிகராக செம குத்து குத்துகிறார். ஒரேநாளில் காதலிக்காக ஒன்றரை லட்சம் செலவு செய்து விழி பிதுங்கும் இடங்களிலும், காதலியை மீண்டும் கைபிடிக்க போராடும் இடங்களிலும், நடிப்பிலும் உச்சம் தொட்டிருக்கிறார். &ஹேட்ஸ் ஆப், கீப் இட் அப்& ரவி!ஐஸ்வர்யாவாக ஹன்சிகா மோத்வானி, அழகு பதுமையாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். ஆனாலும், அநாதையான அவர் பாசத்திற்காக தானே ஏங்க வேண்டும், பணத்திற்காக ஏங்குவது ஆரம்பத்தில் லாஜிக்காக இடிக்கிறது.வசதியான வீட்டுப்பிள்ளையாக அர்ஜூனாக வரும் வம்சி கிருஷ்ணா மேற்படி நாயகர் - நாயகியின் காதல் ஜெயிக்க வேண்டி வலிய காதல் வில்லன் ஆக்கப்பட்டிருப்பதும் செயற்கைதனமாக இருப்பது ரசிகனை சோர்வடைய செய்கிறது.
விடிவி கணேஷ், உமா பத்மநாபன், சங்கர நாராயணன், ஸ்ரேயா, மதுமிதா.. உள்ளிட்டவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நடிகராகவே வரும் ஆர்யாவும் அசத்தியிருக்கிறார். டண்டணக்கா..., இதற்கு தானே ஆசைபட்டாய்..., அடியே அடியே...& உள்ளி்ட்ட ஐந்து பாடல்களும் டி.இமானின் இசையில் படத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கின்றன. சந்துருவின் வசனம், எஸ்.செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், லக்ஷ்மனின் எழுத்து இயக்கத்திற்கு மேலும் ப்ளஸ்.ஆனாலும், ஆன்டனியின் ஏனோ தானோ எடிட்டிங்கும், பேஸ்புக்கில் கார்த்திக் - ஜெயம் ரவியை தேடி பிடிக்கும் ஹன்சிகா அண்ட் கோவினர், அதில் அவரது ஜிம் கோச்சர் டிடெயிலையும் படித்திருக்கலாமே.? எனும் கேள்வி எழுப்பும் லாஜிக் மிஸ்டேக்கும், சற்றே ரோமியோ ஜூலியட்டை ரோதனை - சோதனைக்கு உள்ளாக்கிவிடுவது பலவீனம்!
மற்றபடி ரோமியோ ஜூலியட் - கலக்கல் ..............