இரத்த சோகை மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும் கருவேப்பிலை
கருவேப்பிலை (காலசாக)
(Murraya Koenigii)
தன்மை
மலத்தை இளக்கி வெளித்தள்ளும். இரத்தத்தை விருத்தி செய்யும்.உணவுக்கு சுவையூட்டும். குளுமைத் தன்மை கொண்டது. உடலுக்கு வலிமையூட்டுவது. வாதத்தை வளர்க்கும். பித்தம், கபம், வீக்கம், இரத்தபித்தம் முதலியவற்றைப் போக்கும். அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
தீர்க்கும் நோய்கள்
இரத்த சோகை(Anemia) குணமாகும். உள்ள உறுப்புகளுக்கு பலம் தரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஈரலை பலப்படுத்தும். இரத்த சர்க்கரையை குணப்படுத்தும்.Anti-Protozoa, Anti-Fungal ஆக செயல்படும். சளியை குறைக்கும். Nausea என்ற உடல்நிலை சரியில்லாமல் ஏற்படும் குமட்டல் நிலை வராது.பித்தம், கபம், வீக்கம் மற்றும் இரத்தபித்தம் குணமாகும்.