அல்சர் குணமாக்கும் மிக்சட் ப்ளவர் சூப்






தேவையான பொருள்கள் 

  •  முருங்கைப் பூ ---  1/2 கப் 
  •  ஆவாரம் பூ ---  1/2 கப் 
  •  செம்பருத்திப் பூ ---  1/2 கப் 
  •  பாசிப்பருப்பு ---  1/4 கப் 
  •  மஞ்சள் தூள் ---  1 சிட்டிகை 
  •  மிளகுத் தூள் ---  1 ஸ்பூன்  
  •  உப்பு ---  தேவையானது 
  •  கொத்துமல்லி ---  சிறிது 

செய்முறை 

  •  பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.


  • இத்துடன் சுத்தம் செய்த முருங்கைப் பூ ,ஆவாரம் பூ , செம்பருத்திப்பூ சேர்த்து வேக வைக்கவும். 1 கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.பூக்கள் வெந்ததும் வடிகட்டி எடுத்து அதில் மிளகுத் தூள் சேர்த்து சூப்பாக பருகலாம்.


  • க்ரேவியாக கூட்டு போல் செய்து மிளகுத் தூள், உப்பு சேர்த்து சைட்டிஷ்ஷாகவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

பயன்கள் 

    அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் ஏற்றது .முழுச்சாப்பாடு எடுக்க முடியாதவர்களுக்கு இந்த சூப் நல்ல பலனைத் தரும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url