ஆரோக்கியமான மற்றும் சுவையான சமையலுக்கு பனீர் தயாரிப்பது எப்படி?
நாம் வீட்டிலேயே எளிமையான முறையில்,குறைந்த செலவில் பனீர் தயார் செய்து கொள்ளலாம். பனீர் தயாரிப்பதற்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது , தண்ணீர் கலக்காத தரமான பால் தேவை என்பதாகும்.
முதலில் 1லிட்டர் பாலைக் கொதிக்க வைக்கவும். 1 எலுமிச்சையின் சாற்றை விதைகள் இல்லாமல் கவனமாக ஒரு கிண்ணத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.பால் கொதித்ததும் , தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாற்றை பாலுடன் சேர்க்கவும். சேர்த்தபின், மிதமான தீயில் வைத்து மெதுவாக கிளறவும். பால் திரிந்து திரித்திரியாக ஆகும்.சில நிமிடங்கள் கொதித்ததும், பாலின் மீது தண்ணீர் தனியாக நிற்கும்.
பாத்திரத்தை இறக்கி, 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். அதன்பின், மெல்லிய துணியில் ஊற்றி பிழிந்து வடிகட்டவும். தண்ணீர் முழுவதும் வடிந்து துணில் இருக்கும் திரிந்த பகுதி பனீர் ஆகும். துணில் சுற்றி உள்ள பனீரை துணியுடன் Ice Tray-ல் வைத்து , இதன் மீது கனமான ஒரு பொருளை வைக்கவும். 1 மணி நேரம் கழித்து, துணியை நீக்கி விட்டால் Ice Tray-ன் வடிவத்திற்கு பனீர் கிடைக்கும். இதை நாம் தகுந்த அளவில் வெட்டி வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.