வயிற்றுக் கோளாறுகள் , வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும் சுண்டைக்காய் கிரேவி
சுண்டைக்காய் கிரேவி
தேவையான பொருள்கள்
- சுண்டைக்காய் --- 1/4 கிலோ
- புளி --- 50 கிராம்
- மிளகாய்ப்பொடி --- 2 ஸ்பூன்
- வெந்தயப்பொடி --- 1/2 ஸ்பூன்
- கடுகு --- 1/2 ஸ்பூன்
- உப்பு --- தேவையானது
- நல்லெண்ணெய் --- 2 மேஜைக்கரண்டி
- வெல்லம் பிடித்தால் --- 1 டீ ஸ்பூன்
- மஞ்சள்பொடி --- 1/4 டீ ஸ்பூன்
செய்முறை
- சுண்டைக்கையை கழுவித் துடைத்துவிட்டு வகிர்ந்து, உப்பு, மஞ்சள்பொடி கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- நல்லெண்ணெய் காய வைத்து சுண்டைக்காய் போட்டு பொறித்து எடுக்கவும். கடுகை பொரித்த பின் மிளகாய்பொடி, புளிக்கரைசல் விட்டு சேர்த்து சுண்டைக்காயும் போட்டு வேகவிடவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரியும் தருணம் வெந்தயபொடி சேர்க்கவும். வெல்லம் பிடித்தால் கலந்து இறக்கவும்.
- சுண்டைக்காய் ஊறுகாய் கிரேவி தயார்.
பயன்கள்
வயிற்றுக் கோளாறுகள் , வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும். தொட்டு சாப்பிட ஏற்றது.